சென்னை,ஏப்.30- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவர்கள் சேர்ந்துள் ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. மாணவர் களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப் படும் ரூ.1000 ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக் கப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஊக்கத் தொகை திட்டம், மருத் துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிர முயற்சிகள் காரணமாக அரசு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
நேற்றைய (29.4.2024) நில வரப்படி அரசுப் பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயி ரத்து 940 மாணவர்கள் சேர்ந் துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையை மே இரண்டாவது வாரத்துக்குள் 4 லட்சமாக உயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
Leave a Comment