பெங்களூரு, ஏப். 29- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அம் மாநிலச் சட்டமன்றத்திற்கு வெளியே மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு கருநாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கருநாடக அரசு அறிவித்தது.
வறட்சியால், பயிர்கள் சேதமடைந் தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கருநாடக அரசு கோரிக்கை விடுத்தது.
கருநாடக அரசுக்கு வறட்சி, நிவாரணப் பணிக்காக ஒன்றிய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் இது கருநாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக் குறைவாகும்.
எனவே வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு அநீதி இழைத்துள்ளதாகக் கூறி கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற் றும் அமைச்சர்கள் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைவரும் கருநாடக சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டு கையில் சொம்பு ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராகத் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி கருநாடகாவில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.