போபால்,ஏப்.29- மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்த அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை உரிய விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 120 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வா கத்தின் குறைபாடு காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
மாணவர்கள் தோல்வி: குறிப்பாக வணிகவியல் ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடத்தை கற்பித்ததாகவும் இடைநிலை ஆசிரி யர்கள் உயர்நிலை அறிவியல் மாணவர் களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக் கிறது. இந்த இரண்டு பள்ளிகளுமே இந்தூரில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது . மகாராட்டிரா எல்லைக்கு அருகே பர்மாணி மாவட்டத்தில் உள்ள பன்செமல் தொகுதியில் இந்த பள்ளிகள் அமைந்திருக்கின்றன.
அதிர்ச்சி நிகழ்வு: மால்ஃபா அரசுப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 85 மாணவர்கள் இந்த தேர் வுகளை எழுதினர். அதில் அனைவருமே ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந் திருக்கின்றனர்.
பெரும் அதிர்ச்சி தந்த இந்த நிகழ் வையடுத்து பள்ளியின் ஒட்டுமொத்த ஊழியர்களும் பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். அதேபோல பிப்ரானி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 41 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் அனைவருமே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த உத்தர விட்டது. அந்த பகுதி கல்வி அதிகாரி யான அருண் மிஸ்ரா மால்ஃபா பள் ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அதிர்ச்சி தரும் இந்த தோல்விக்கு பள்ளியின் முதல்வரான அலோக் சிசோடியாவே காரணம் என வும் அவர் மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர்களை கற்பிக்க அனுமதிக்க வில்லை என்றும் பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களை கற்பிக்க இரண்டாம் நிலை ஆசிரியரும் கணிதம் கற்பிக்க வணிகவியல் ஆசிரியரும் நியமனம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.
விசாரணை அறிக்கை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 75 மாணவர்களில் 5 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஒட்டுமொத்த ஊழியர் களும் நீக்கப்பட்டுள்ள நிலையில் பர்மாணி பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையருக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் கடுமை யான நடவடிக்கை எடுக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பிப்ரானி உயர்நிலைப்பள்ளி ஊழியர்கள் மீதும் இதே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.