29.04.2024 இன்று காலை 7.00 மணிக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள குறள்நெறியாளர்
கு. பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம்-தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு புரவலர் பி.எஸ்.ஆர். மாதவராஜ் மாலை அணிவித்தார்.
உடன் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட தலைவர் சோ. முருகேசன், செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், பொருளாளர் பேராசிரியர் கு. குட்டிமணி, உறுப்பினர் நெல்லுபட்டு அ. இராமலிங்கம், புதுக்கோட்டை அம்மா பித்தன் (அதிமுக), பேராசிரியர் அ. சதிசுகுமார்.கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், காப்பாளர் ஞா.பிரான்சிஸ் கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், கோட்டாறு கிளைக்கழக தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி க.யுவான்ஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், தோழர்கள் மோகன் தாஸ், சிதம்பரம் மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர் கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு புரட்சிக் கவிஞரின் நூல் களை பரப்பியும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை நடத்தினர்.