மலேசியாவில் “சுயமரியாதைச் சுடரொளி” சு. அறிவுக்கரசு அவர்களின் படத்திறப்பு

viduthalai
1 Min Read

கடாரம், ஏப். 29- மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம், வடபுலத்தில் கெடா (கடாரம்) மாநிலத்தின் தொடர்புக்குழு அமைப் புக்கூட்டத்தினை, கடந்த 27.4.2024 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, பெரியாரியல் சிந்தனை யாளரும், மக்கள் பணி யில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி மறைந்த வருமான டத்தின், தாம ரைச்செல்வி அவர்களின் நினைவு நூலக மண்டபத் தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் இவ்வமைப்பு கூட்டத் தில் கடந்த 22-.1.-2024 அன்று மறைவெய்திய தமிழ்நாடு திராவிடர் கழ கத்தின் செயலவைத் தலை வர் கொள்கை வீரர், “சுய மரியாதைச் சுட ரொளி” சு.அறிவுக்கரசு அவர்க ளின் படத்திறப் பும் மலர் தூவி இரங்கல் ஏற்றலும் நிகழ்வுற்றது. சு.அறிவுக்க ரசு அவர்களின் படத் தினை மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக. பஞ்சு அவர்க ளும் கழக ஏடலர் இரெ. சு.முத்தையா அவர் களும் திறந்து வைத்தனர்.

இரங்கல் ஏற்றலை அறிவித்த மாநில தொடர் புக்குழு தலைவர்; “அரிமா நோக்குடன், அறிவர் போக்குடன் எதனையும் அணுகவல்ல மானமுள்ள சுயமரியாதைக்காரராய் என் போன்ற இளை யோரை வார்த்தெடுத்து, அறிவு தளத்துக்குள் ஊடங்களூடாக வழி நடத்திய பெருமைக்குரி யவர் அய்யா அறிவுக்கரசு” எனக் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *