அகமதாபாத், ஏப். 29- குஜராத் கடற்கரையில், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், இது தொடர்பாக 14 பாகிஸ்தானியர்களை கைது செய்தனர்.
குஜராத்தில், அரபிக் கடல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவ தாக, இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து, அரபிக் கடலில் நேற்று (28.4.2024) இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அதில், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருள் இருந்தது. விசாரணையில், அந்தப் படகு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் கைது செய்த அதிகாரிகள், போர்பந்தருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
குஜராத்தில், அகமதாபாதைச் சேர்ந்த மனோகர்லால் இனானி, ராஜஸ்தானைச் சேர்ந்த குல்தீப்சின் ராஜ்புரோகித் ஆகியோர், போதைப் பொருட்கள் தயா ரிப்பு ஆலைகளை நடத்தி வருவதாக, மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, ராஜஸ்தானின் சிரோகி மற்றும் ஜோத்பூரில், அவர்களுக்கு சொந்தமான ஆலைகளிலும், குஜ ராத்தின் காந்தி நகர் மற்றும் பக்தி நகரில் உள்ள ஆலைகளிலும், அதிகாரி கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், 146 கிலோ மெபட்ரோன் எனும் போதைப்பொருள் திட மற்றும் திரவ நிலையில் கைப்பற் றப்பட்டது. இதன் மதிப்பு, 230 கோடி ரூபாய். இதையடுத்து, குல்தீப்சின் ராஜ்புரோகித், மனோகர்லால் இனானி ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர்.