பெலகாவி, ஏப்.28 இரண்டு கட்டத்தேர்தலிலும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து குறிப்பாக தென் இந்தியாவில் ஒரே நம்பிக்கையாக இருக்கும் கருநாடகாவில் பிரதமர் ஒரே நாளில் 4 கூட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
கருநாடகா மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது., 26.4.2024 அன்று முதல்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் மே 7ஆம் தேதி 2-ஆவது கட்டமாக 14 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்கட்டத் தேர்தலுக்காக பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாப் பூர், மைசூருவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற துடன், வாகனப் பேரணியும் நடத்தி இருந்தார். இவ்வளவு நடத்தியும் பொது மக்கள் மோடியின் பரப்பு ரைக்கு ஆதரவு தரவில்லை அதே நேரத்தில் பாஜகவிற்கு நடந்து முடிந்த 14 தொகுதி வாக்குப்பதிவில் ஒரு இடம் கூட வருவது மிகவும் கடினம் என்று உள்துறை அறிக்கை சென்ற நிலையில் உடனடியாக கருநாடகாவிற்கு வரட்சி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் திடீரென மோடி ஒரே நாளில் 4 இடங்களின் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். ஏற்கெனவே 2ஆ-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள சிவமொக்கா, கலபுரகி தொகுதி களிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்திருந்தார். பெலகாவி, உத்தர கன்னடா, தாவணகெரே, பாகல் கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளதால் கருநாடகாவில் அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இன்று (28.4.2024) காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பெலகாவி மற்றும் சிக்கோடி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். பிறகு பெலகாவியில் இருந்து மதியம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சிக்கு அவர் செல்கிறார். மோடி இன்று மதியம் 1 மணியளவில் சிர்சியில் நடைபெறும் பிரசார கூட் டத்தில் பங்கேற்று பாஜக வேட் பாளரை ஆதரித்து பேசியபிறகு, சிர்சியில் இருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். மதியம் 3 மணியளவில் தாவண கெரேவில் நடக்கும் பிரசார கூட்டத் தில் பங்கேற்று கூட்டம் நிறைவு பெற்றதும், தாவணகெரேயில் இருந்து பல்லாரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். மாலை 6 மணிக்கு பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்று மேனாள் அமைச்சர் சிறீராமுலுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இரவு ஒசப்பேட்டேயில் உள்ள ஓட்டலிலேயே பிரதமர் மோடி தங்கி நாளை (29.4.2024) காலை 11 மணியளவில் ஒசப்பேட்டேயில் இருந்து பாகல்கோட்டைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பிறகு பாகல்கோட்டையில் மதியம் 12.15 மணியளவில் நடக்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பங் கேற்கிறார். பிரதமர் வருகையை யொட்டிமாநி6அம் எங்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இவர் மத்திய மேற்கு கருநாட்கா மாவட்டங்களில் பொதுக் கூட்டம் நடத்த விருக்கிறார். தற்போது அப்பகுதியில் கடுமையான வெயில் காலமாகையால மோடியின் கூட்டத் திற்கு எப்படி ஆட்களை அழைத்து வருவோம் என்று மிகவும் குழப்பமான நிலையில் பாஜக தொண்டர்கள் உள்ளனர்.