மே 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை கடுமை
சென்னை,ஏப்.28- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
26.4.2024 முதல் 29.4.2024 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
30.4.2024 மற்றும் 1.5.2024 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டின் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
2.5.2024 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
26.4.2024 முதல் 30.4.2024 வரை தமிழ் நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2கு செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 3கு – 5கு செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39கு- 42கு செல்சியஸ், இதர தமிழ்நாட்டின் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35கு-39கு செல்சியஸ் இருக்கக்கூடும்.
26.04.2024 முதல் 30.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 26.04.2024 முதல் 30.04.2024 வரை அடுத்த 5 நாட்களில் வட தமிழ்நாட்டில் உள் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழ்நாட்டின் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளின் விவரம்:
‘வாட்ஸ்-ஆப்’ பில் வழக்குரைஞர்களுக்குப் பகிரப்படும்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தகவல்!
புதுடில்லி, ஏப்.28- ‘விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ள வழக்குகளின் விவரம், வழக்குகள் தாக்கல் செய்தல் மற்றும் விசாரணைக்கு பட்டிய லிடப்படுவது தொடர்பான விவரங்களை வாட்ஸ்ஆப் மூலம் வழக்குரைஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் சார்பில் பகிரப்படும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற நடைமுறைகள் எண்ம மயமாக்கல் திட்டத்தின் அடுத்தகட்ட குறிப் பிடத்தக்க நடவடிக்கையாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தில் 25.4.2024 அன்று நடைபெற்ற ‘மாநில அரசின் கொள்கை வழிகாட்டுதல் கோட்பாடு களின் ஓர் பகுதியான அரசமைப்புச் சட்டப் பிரிவு 39(பி)-இன் கீழ் தனியார் சொத்துகளை, பொது சமூகத்தின் பொருள் வளங்களாக கருத முடியுமா? என்ற சட்டக் கேள்வியை எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான 9 நீதிபதிகள் அமர்வு விசாரணையி ன்போது, அந்த அமர்வுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
‘உச்சநீதிமன்ற தகவல் தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப் படும்’ என்று அவர் அறிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: உச்சநீதிமன்றத் தின் 75 ஆண்டு கால வரலாற்றில், ஓர் சிறு முயற்சியாக இந்த வாட்ஸ்ஆப் சேவை அறி முகப்ப டுத்தப்படுகிறது.
இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீதி பெறும் உரிமையை வலுப்படுத்தவும், நீதி நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுப்படுத்த வும் இந்த சேவையை உச்சநீதின்றம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறையின்படி, ஓர் வழக்கை நடத்தும் வழக்குரைஞர் மற்றும் உச்சநீதிமன்றத் தில் நேரடியாக ஆஜராகும் மனுதாரர்களுக்கு வழக்குகள் தாக்கல்செய்யப்பட்ட விவரம், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு களின்விவரம், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் தானாக அனுப்பப்பட்டுவிடும்.
விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள் வழக்குரைஞர் சங்கத் தில் உறுப்பி னர்களாக இருக்கும் அனைவருக்கும் வாட்ஸ்ஆப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் இதற்கான வாட்ஸ்ஆப் எண்ணான 8767687676-அய் அவர் பகிர்ந்தார்.