புதுடில்லி,ஏப்.28 – திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு தொடர்பான சிபிஎம் திரிபுரா மாநிலக்குழு அளித்த புகார்கள் மீது உடனடி நடுவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கும், காலி யாக இருந்த ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப் பட்டது.
இந்த 3 தொகுதிகளிலும் இடது சாரிகள் – காங்கிரஸ் அடங்கிய “இந்தியா” கூட்டணி களமிறங்கி யுள்ள நிலையில், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்கும், ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது.
26.4.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் திரி புரா கிழக்கு (பழங்குடி) மக்கள வைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்கட்ட வாக்குப்பதிவிலும், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச் சாரத்திலும் பாஜகவினர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி பல்வேறு இழிவான செயல்களில் ஈடுபட்டனர்.
109% வாக்குகள் பதிவானது எப்படி?
வாக்குப்பதிவு நடைபெற்ற 2 நாட்களுக்குப் பிறகு வெளி யான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.
அதாவது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதி யில் உள்ள மஜ்லிஸ்பூர், கயார்பூர், மோகன் பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகு திகளில் உள்ள 4 வாக்குச் சாவடி களில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிக எண் ணிக்கையிலான, அதாவது 100%க்கும் மேலாக வாக்குப் பதிவு நடைபெற்ற தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புள்ளிவிபர ஆதாரத்துடன் தகவல் அறிக்கை வெளியிட்டது.
தொடர்ந்து அதே புள்ளி விபர அறிக்கையுடன் திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் 100%க்கும் மேலாக வாக்குப் பதிவானது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏப்ரல் 22 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் திரிபுரா மாநிலக் குழு புகார் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது.
திரிபுராவில் நடைபெற்ற தேர் தல் முறைகேடு, கள்ள ஒட்டு மற் றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் திரிபுரா மாநிலக் குழு மூன்று முறை கடிதம் எழுதியுள் ளது. இந்த மூன்று கடிதத்திற்கும் மாநில மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி திரி புரா தேர்தல் சர்ச்சை விவகாரங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக் கைக் கோரி கடிதம் மூலம் வலியு றுத்தியுள்ளார்.
அந்த கடிதத்துடன் இரண்டு நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக திரிபுரா மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளுக்கும் மொத்த வாக்குக ளுக்கும் இடையே பொருத்த மின்மை உள்ளது.
இரண்டாவதாக திரிபுரா மேற்கு நாடாளுமன்றத் தொகுதி யில் வேட்பாளராக இருக்கும் பாஜகவின் பிப்லப் குமார் தேப்பின் அருவருப்பான மற்றும் நயவஞ்சகமான பேச்சுகள் பற்றியது.
இந்த இரண்டு புகார்களையும் தீவிரமாக எடுத்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் கடிதத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுப்பதாக எவ்வித பதிலும் அனுப்பவில்லை.