நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அறிவிப்பு
மதுரை, செப். 13- மதுரை மாவட் டத்தில் அனுமதியற்ற மனை பிரிவு களை இணையவழி மூலம் விண் ணப்பித்து வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று நகர் ஊர மைப்பு உதவி இயக்குநர் மஞ்சு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் எந்தவொரு அனு மதியற்ற மனைப் பிரிவு ஏற்படுத்தப் பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு, அதற்கான விற்பனை பத்திரம் 20-10-2016 அன்று அல் லது அதற்கு முன்னர் பதிவு செய்யப் பட்டு இருந்தால், அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப் பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி 6 மாத காலம் அவகாசம் வழங்கி அரசு உத் தரவிட்டது. அதன்பின் தொடர்ந்து அதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது மீண்டும் இறுதி வாய்ப்பாக தமிழ்நாடு அரசு கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள் ளது. எனவே இந்த வாய்ப்பை மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கள் பயன்படுத்தி கொள்ள வேண் டும் என்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பெ.கோ.மஞ்சு கேட்டு கொண்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அனுமதியற்ற மற்றும் மனைப்பிரிவு மனைகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி கடந்த 2016ஆ-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமை யும் விற்கப்பட்ட மற்றும் விற்கப் படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்தி கொள்ளலாம்.
அதற்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ஆ-ம் ஆண்டு விதிகளுக்கு அடுத்த ஆண்டு (2024) ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அதற்கான அரசாணை கடந்த 4-ஆம் தேதி அன்று வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை எண்-118 மூலம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனையை வரன்முறைப்படுத்த விரும்புபவர்கள், www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண் ணப்பப் பதிவு செய்து கொள்ள லாம். அதனால் எஞ்சிய மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன் முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.