சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட் டதைத் தொடர்ந்து, துணை ராணு வப் படையினர் கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி சென்னை அனுப்பி வைத்தனர்.
விவசாயிகள் பயணம் செய்த ரயில் பெட்டியில் கழிப்பறை பயன் பாட்டுக்கு கூட தண்ணீர் கொடுக்க வில்லை என்று புகார் எழுந்தது.
இதற்கிடையே ரயில்வே துறை யின் பழிவாங்கும் போக்கை கண் டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலை மையில் 100-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் நேற்று (26.4.2024) சென்னை சென்டிரல் ரயில் நிலை யத்தின் வெளியே ஆர்ப்பாட் டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அய்யாக் கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதா வது:-
ஆயிரம் விவசாயிகள் வேட்பு மனு
ஜனநாயக நாட்டில் எங்களின் உரிமைக்காக போராடுவதற்கு கூட உரிமை இல்லை. எங்களை டில்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். நாங்கள் ஏறிய ரயில் பெட்டியில் தண்ணீர் வசதியே இல்லை. கழிப்பறையில் தண்ணீர் இல்லை. குடிக்க குடிநீர் தரவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தோம்.
இதேபோல விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக் கைகளை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டம் டில்லியில் நடந் தது. இந்த கூட்டத்தில், வாரணாசி யில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து ஆயிரம் விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து 113 விவ சாயிகள் மோடியை எதிர்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்கிறோம். விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்த்து பிரதமர் கேட்ப தில்லை.
மீண்டும் மோடி பிரதமராக வந்தால் இந்த நாடு சர்வாதிகார நாடாக மாறிவிடும். கருநாடகாவில் தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்றால் ரயிலிலும் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.