பா.ஜ.க.வே காரணம் என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஏப். 27- டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட் டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டியுள் ளது.
டில்லி மாநகராட்சியைபொறுத்தவரை, ஒவ்வொரு நிதியாண்டும் மேயர் பதவி சுழற்சி முறையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 5 ஒற்றையாண்டு காலகட்டத்தில், முதல் ஆண்டில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோன்று, 2ஆவது ஆண்டு பொதுப் பிரிவின ருக்கும், 3ஆவது ஆண்டு ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள 2 ஆண்டுகள் பொதுப் பிரிவினருக்கு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் டில்லிக்கு புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மொத்தமுள்ள 250 வார்டுகளில், கடந்த 2022 டிசம்பரில் நடந்த டில்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்றது. பா.ஜ.க. வுக்கு 104 வார்டுகள் கிடைத்தது. இருப்பினும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக, ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒபராய், பா.ஜ.க. வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். டில்லி துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார்.
இந்த சூழலில், நடப்பு ஆண்டில் டில்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல்இன்று (27.4.2024) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் உத்தரவின் பேரில் மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. டில்லி மேயர் பதவிக்குஆம் ஆத்மி சார்பில் மகேஷ் கிச்சியும், துணை மேயர் பதவிக்கு ரவீந்தர் பரத்வாஜும் போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்குகாங்கிரஸ் ஆதரவுதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.