காங்­கி­ர­ஸின் தேர்­தல் அறிக்­கைக்கு மதச்­சா­யம் பூசு­வதா?

1 Min Read

காங்­கி­ரஸ் கட்சி கண்டனம்

புதுடில்லி, ஏப். 27- டில்­லி­யில் உள்ள காங்­கி­ரஸ் கட்சியின் தலை­மை­ய­கத்­தில் கட்­சி­யின் பொதுச் செய­லர் ஜெய் ராம் ரமேஷ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:
வேலை­யில்­லாத் திண்­டாட்­டம், விலை­வாசி உயர்வு, பொரு­ளா­தார சம­மின்மை ஆகிய முக்­கிய பிரச்சினை­க­ளின் அடிப்­ப­டை­யில் தேர்­தல் களத்­தில் செயல்­பட்டு வரு­கி­றது காங்­கி­ரஸ். மாறாக, பா.ஜ.க. உரு­வாக்­கிய ஆடு­க­ளத்­தில் நாங்­கள் ‘விளை­யா­ட’­­வி­ரும்­ப­வில்லை.
உண்­மை­யான பிரச்சினை­க­ளில் இருந்து மக்­க­ளின் கவ­னத்தை திசை திருப்ப பொய்­களை பரப்­பு­கி­றார் மோடி. ‘பொய்­மையே வெல்­லும்’ என்­பதே அவ­ரது தாரக மந்­தி­ரம். இட­ஒ­துக்­கீட்டை ஒழிக்க வேண்­டும் என்ற உள்­நோக்­கத்­துடன் மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பை அவ­ரது அரசுதவிர்த்து வரு­கி­றது.

காங்­கி­ர­ஸின் தேர்­தல் அறிக்­கைக்கு முத­லில் மத­வாத சாயம் பூசிய பிர­த­மர், இப்­போது அதில் இல்­லாத விஷடயங்­களை இருப்­ப­தாக பொய் பிரச்­சா­ரம் செய்­கி­றார். “மோடி­யின் உத்­த­ர­வா­தம்’ என்ற முழக்கத்தை கைவிட்ட அவர், மக்­களை பிளவு­ படுத்­தும் பேச்சு நடையை பயன்­ப­டுத்த தொடங்­கி­யுள்­ளார்.
சொத்து வாரி­சு­ரிமை வரி குறித்து தேர்­தல் அறிக்­கை­யில் எங்­கும் குறிப்­பி­டப்­பட­ வில்லை. இந்த வரியை ஒழித்­த­வர் மறைந்த மே­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி.அதே நேரம், மறைந்த பா.ஜ.க. மூத்த தலை­வர் அருண் ஜேட்லி, மற்­றொரு மூத்த தலை­வர் ஜெயந்த் சின்ஹா ஆகி­யோர் இந்த வரிக்கு ஆத­ர­வாக பேசி­யி­ருக்­கின்­ற­னர். உண்­மை­யில், சொத்து வாரி­சு­ரிமை வரியைஅம­லாக்க வேண்­டு­மென்­பது பா.ஜ.க.வின் கொள்கை என்­றார் ஜெய்­ராம் ரமேஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *