உடுப்பி, ஏப். 26- மகளிர் கட்டணமில் லாப் பேருந்துகளில் பெண்கள் விருப்பப்படி எங்கும் சென்றுவிடு கிறார்கள் இதனால் கணவர்களும் பிள்ளைகளும் தவித்துப்போகின்ற னர். ராவணன் எப்படி சீதையை பொய் சொல்லி கடத்தினானோ அதே திட்டத்தில் தான் காங்கிரஸ் செயல்படுகிறது என்று பேசிய நடிகைக்கு மாநில மகளிர் ஆணை யம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது. உடுப்பி – சிக்கமக ளூரு பா.ஜ., வேட்பாளராக கோட் டாசீனிவாச பூஜாரி போட்டியிடு கிறார். இவரை ஆதரித்து கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ., மேனாள் எம்.எல்.சி.,யும், நடிகையு மான ஸ்ருதி பிரச்சாரம் செய்தார். அப் போது அவர் பேசுகையில், ‘இல வச பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தங்கள் மனைவி எங்கு சென்றார் என்று தெரியாமல், கண வன்மார்கள் பரிதவித்து வருகின்ற னர். பசிக்காக குழந்தைகள் அழு கின்றனர். அவர்கள் ஆன்மிக தலங்களுக்கு தான் செல்கின்றனரா என்று தெரியவில்லை. ஆட்டோ ஓட்டுநர் கள் சவாரி கிடைக்காமல், வேத னைப்படுகின்றனர். ‘அரசு கொடுக் கும் 2,000 ரூபாய் எத்தனை நாட் களுக்கு வரும். ராமாயணத்தில் சீதையிடம் பொய் கூறி, ராவணன் கடத்தியது போன்று, காங்கிரசும் மக்களிடம் பொய்கூறி வருகிறது’ என்று கூறியிருந்தார். இதற்கு பல ரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக ஆர்வலர் மனோகர் என்ப வர், மாநில மகளிர் ஆணையத்தில், ஸ்ருதி மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக் குமாறு ஸ்ருதிக்கு, மகளிர் ஆணை யம் தாக்கீதுஅனுப்பி உள்ளது.
பெண்களைக் கொச்சைப்படுத்திய பிஜேபி பெண் வேட்பாளர்: மகளிர் ஆணையம் தாக்கீது
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
