புதுடில்லி, ஏப். 26– மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் நன்கொடை பத்திர ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘தேர்தல் பத்திர முறை மக்க ளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம் பெனி கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்ட விரோ தம்’ என்று கூறி, கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், தேர்தல் பத்திர நன்கொடை பத்திர ஊழல் குறித்து சிறப்பு விசார ணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மூத்த வழக் குரைஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டவர்கள் உறுப்பினர் களாக உள்ள பொதுநல அமைப் புகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
அதில், தேர்தல் நன்கொடை ஊழலில் அமலாக்கத்துறை, சி.பி.அய். வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப் புகளுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆயிரம் கோடி நன்கொடை வழங்கியபோதும் அதனை விட 100 மடங்கு அள வுக்கு நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன. இதன் மூலம் அரசியல் கட்சிகளும், நிறுவனங் களும் லாபம் அடைந்துள்ளன.
இந்த முறைகேட்டில் பொது வாழ்வில் உள்ளவர்களும், அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட் டுள்ளனர்.
எனவே உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு விசா ரணைக்குழு அமைத்து விசா ரிக்க வேண்டும் என்று மனுதா ரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.