சுயேச்சைகளை திரும்பப் பெறச் செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியே ஒப்புதல்!
மும்பை, ஏப். 26- சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுள்ளது அம்பலமாகி யுள்ளது, சுயேட்சை வேட்பாளர்களை திரும்பப் பெறச் செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளார்.
பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் சூரத் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு உரிய காரணங் களின்றி நிராகரிக்கப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப் பட்ட தோடு, காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்புமனுவில் கையெழுத்திட்ட வர்கள் திடீரென காணாமல் போயினர். அதோடு சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்பு மனுவை திடீரென திரும்பப் பெற்றதால், பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது.
குறுக்கு வழியில் வெற்றிபெற பா.ஜ.க. தில்லுமுல்லு செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலை யில், அது உண்மை என தற்போது அம்பலமாகியுள்ளது. சுயேட்சைவேட்பாளர்களுக்கு பா.ஜ.க.சார்பில் பணம் கொடுத்து வேட்பு மனுக்களை திரும்பப் பெறச் செய்ததும் அம்பலமாகியுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்த தாக பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஒப்புக்கொண்டுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வர்களை நேரில் அணுகினோம் என்றும், அதன்பிறகுதான் அவர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற் றனர் என்றும் பா.ஜ.க. பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே கூறியுள்ளார்.
சூரத் தொகுதியைப் போல் மற்ற தொகுதி வேட்பாளர்களையும் அணுகியுள்ளோம் என்றும் பா.ஜ.க. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சூரத் தேர்தல் முடிவு
தடை விதிக்க தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
புதுடில்லி, ஏப்.26- குஜராத்தின் சூரத் மக்களவைத் தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சூரத் மக்களவைத் தேர்தலில் முறைகேடுகள் நடை பெற்று உள்ளன. எனவே அந்த தொகுதி தேர்தல் முடிவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தலைமையிலான குழு ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளது.