பெங்களுரு, நவ.21 கருநாடக மாநிலம் பெங் களூரு தெற்கு தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. இவர் சமீபத்தில் தனியார் வாடகைக் கார்களால் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக ஆதரவு தெரிவித்தார். இந்த தனியார் வாட கைக்காரர்களால் ஆட் டோக்களை ஓட்டுபவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி சித்தராமையா அரசு அதற்கு தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் அரசு விதித்த தடையை நீக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், வாடகைக் கார் முறையால் ஆட் டோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்பு உண்டு. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி வரு கின்றனர்.
இதனிடையே, பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் தேஜஸ்வி சூர்யா அரசு கோரிக்கை விடுத் ததை கண்டிக்கும் வித மாக பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டு நர் தனது ஆட்டோவில் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுவரொட் டியை தனது ஆட்டோ வில் ஒட்டியிருந்தார். இதைக் கண்ட பாஜக பிரமுகர் வெங்கடேஷ் தனது ஆதரவாளர்களு டன் சென்று ஆட்டோ வில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்ற முற்பட்டார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அதற்கு எதிர்ப்பு தெரிவிததால் ஆத்திரம டைந்த வெங்கடேஷ் தனது ஆதரவாளர்களு டன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை மீண்டும் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.