திருவனந்தபுரம், ஏப். 25- வெளி நாட்டில் இருந்து ரூ.2,397 கோடி பணம் பெற்று பரபரப் புக்கு உள்ளான கேரள மாநி லத்தைச் சேர்ந்த ‘பிலீவர்ஸ் சர்ச்’ நிர்வாகம், இந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் பெரும்பாலான இடங்கள் உள்பட நாடு முழுவ தும் பதிவு செய்யப்பட்ட சுமார் 30 அறக்கட்டளைகளை நடத்தி வரும் கிறிஸ்தவ மதத் தலைவர் கே.பி.யோஹன்னன் தலைமையி லான பிலிவர்ஸ் சர்ச், வெளிநா டுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது.
இதுதொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் வரு மான வரித்துறை, அமலாக்கத் துறை என ஒன்றிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி முறைகேடு களை கண்டு பிடித்தன.
அதன்படி, கேரள மாநிலத் தில் பிலீவர்ஸ் தேவாலயத்தால் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப் போது, ஏராளமான நிதி முறை கேடாக பெறப்பட்டது.
விசாரணையின்போது, ‘பிலீ வர்ஸ் சர்ச்’ நடத்தப்படும் என்ஜி ஓக்கள் மூலம் பெரும் வெளி நாட்டு நிதியைப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, 2015-2016இல் ரூ.2,397 கோடி பணம் பெற்றுள் ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ‘பிலீவர்ஸ் சர்ச்’ வெளிநாட்டு நன்கொடை பெற ஒன்றிய அரசு தடை விதித் தது. அதுபோல மேலும் பல கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து உரிய ஆவ னம் இன்றி நிதி பெற தடை விதிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு ‘பிலீவர்ஸ் சர்ச் பிஷப் யோகன்னன், டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது, கங்கையை சுத் தப்படுத்தும் பணிக்காக, ரூ.1 கோடி நிதி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு, இந்த தேவாயலத்தின் மீதான சர்ச்சைகள் முடி வுக்கு வந்தன.
இதுதொடர்பாக பிலீவர்ஸ் சர்ச் நிர்வாகம் மீது விமர்ச னங்கள் எழுந்தன.
இந்த நிலையில், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் (2024) பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் தரப்பில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிலீவர்ஸ் சர்ச் பத்தனம் திட்டாவில் பா.ஜ.க. வேட் பாளருக்கு ஆதரவை வழங்கி அதி காரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இது கேரள மாநிலத்தில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பந்தனம்திட்டா மக்களவை தொகுதியில், காங் கிரஸ் கட்சி சார்பில், ஆண்டோ ஆண்டனி (மிழிசி) எனபவரும் பாஜக சார்பில் அனில் கே.ஆண் டனி (பாஜக) போட்டியிடு கின்றனர். இதனால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் நிர்வாகம் பாஜக வேட் பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து உள்ளது.