கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை
மோடியின் ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது, சித்தராமையா.
எக்ஸ்ரே என்று சொன்னால் பிரதமர் மோடி, பயப்படுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 90 சதவீத மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என ராகுல் காந்தி பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
குஜராத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க சத்திரியர்கள் உறுதி. மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும், மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் “தர்ம ரத”ங்களை அச்சமூகத்தினர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
முஸ்லிம்கள் குறித்து மோடி பேசியதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் உஸ்மான் கனி, பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
பிரதமர் மோடி அவர்களே, பெண்களின் தாலி குறித்து பேசுவதை நிறுத்தி, பணவீக்கம், வேலையின்மை குறித்துப் பேசுங்கள் என பிரியங்கா தாக்கு.
தி இந்து
தேர்தல் பத்திர ‘ஊழல்’ தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் மனு தாக்கல்.

-குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *