கடும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? வானிலை ஆய்வு மய்யம் யோசனை

viduthalai
3 Min Read

சென்னை, ஏப் 25- வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களில் உக்கிரமாக இருக்கும் என்றும், அதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது பற்றியும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

கொளுத்தும் வெயில்

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது ஒவ்வொரு நாளும் இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனிவரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது’என்றபேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

தற்காத்துக்கொள்வது எப்படி?

இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வது தான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரை கள், பாது காப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படு கின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மய்யமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழி முறைகளை தெரிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு,

♦ பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
♦ தாகம் இல்லாவிட்டாலும்போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.
♦ லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர் வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.
♦ பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.
♦ அடிக்கடி குளிப்பதும்கூட நல்லது
♦ மயக்கம் மற்றும் உடல் நிலை சரியில் லாமல் இருந்தால்உடனடியாக மருத் துவரை அணுக வேண்டும்.
♦ சர்க்கரை -உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலு மிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
♦ வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங் களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணி களையோ விட்டுவிடக்கூடாது.
♦ வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.
♦ குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப் படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வுமய்யம் விளக்கி யுள்ளது.

அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்க வேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க் கரை – உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகா தார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *