புதுடில்லி, ஏப்.25 பன்னாட்டளவில் இந்தியாவை தீவிரமாக உற்று நோக்கி வருகின்றனர். மோடியைத் தீவிரமாக அவர்கள் கவனித்து வருகின்றனர், என்று மூத்த பத்திரி கையாளர் மணி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன் ராஜஸ்தானில் இதுபற்றி பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதி காரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள் கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக் களின் பணத்தை எடுத்து இஸ் லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. “அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்த போது,தேசத்தின் செல்வத்தில் முஸ் லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதை வெறுப்பு பேச்சு என்று 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். மின்னஞ்சல் மூலம் அவர்கள் இந்தப் புகார்களை பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணை யத்தில் முறையிட்டுள்ளன.
மூத்த பத்திரிகையாளர் மணி
மோடியின் இந்தப் பேச்சு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி அளித்துள்ளார்.
அதில், இரண்டாம் கட்ட தேர் தலுக்கான பிரச்சாரங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பிரதமரின் பேச்சு கடந்த 4 நாள்களாக ஆபத் தாக சென்று கொண்டு இருக்கிறது. மன்மோகன் சிங் அந்த காலத்தில் பேசாத பேச்சை எல்லாம் பேசிய தாக மோடி பேசுகிறார். சொல்லாத விஷயங்களை மோடி திரித்து பேசுகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத விஷயங் களை மோடி திரித்து பேசிக்கொண்டு இருக்கிறார். விஷமத்தனமாக மோடி பேச்சு உள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பு
இந்துக்களின் சொத்துக்களை எடுத்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாக விமர் சனம் செய்துள்ளார். அதோடு காங் கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு மட்டும் கூடுதல் இட ஒதுக்கீடு கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி யுள்ளார். வெளிப்படையாக மோடி விஷமத்தனமாக பேசிக்கொண்டு இருக்கிறார். உலக நாடுகள் எல்லாம் அதிர்ந்து போய் உள்ளன. ஆஸ் திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடியை எதிர்த்துள்ளனர். மோடி யின் பேச்சைக் கண்டித்துள்ளனர்.
அவரின் பேச்சு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அய்.நா. இதில் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இது முதல் முறை நடக்கிறது. நம் நாட்டு பிரதமருக்கு எதிராக இப்படி வெளி நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது முதல்முறை. உலக நாடு களைச் சேர்ந்த அனைத்து முக்கிய ஊடகங்களும் மோடியின் பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளன. சிறுபான்மையினரை இதனால் எங்கே பாஜக தாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பன் னாட்டளவில் பேரழுத்தமாக மாறி யுள்ளது. உலகளவில் மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தி யாவைத் தீவிரமாக உற்றுநோக்கி வருகின்றனர். மோடியைத் தீவிர மாக அவர்கள் கவனித்து வருகின் றனர்.
தன்னுடைய ஆட்சியின் வெற்றியை, நலத்திட்டங்களை அவரால் பேச முடியவில்லை. அத னால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதனால் மத ரீதியாக எங்கே இந்தியாவில் பெரிய பிளவு ஏற் படுமோ என்ற பெரிய அச்சம் ஏற் பட்டுள்ளது, என்று மூத்த பத்திரி கையாளர் மணி தெரிவித்துள்ளார்.