புதுடில்லி, ஏப். 25- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணரு மான பரகலா பிரபாகர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட் டியில், “தேர்தல் பத்திரத் திட்டம் உலகின் மிகப்பெரிய ஊழல்” என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இத்திட்டத்தில் வெளிப்படை யான அரசியல் நிதி பெறப்பட்டது என்றால், 2018-ஆம் ஆண்டு முதல் பெறப்பட்ட நிதி குறித்து மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றும், அது குறித்த விவரங்களைக் கோரியவர்கள் ஏன் உச்சநீதிமன்றம் சென்றார்கள் என்றும் கேள்வி பரகலா பிரபாகர் எழுப்பியுள்ளார்.
மேலும், “தேர்தல் பத்திர நிதி குறித்த தகவல்களை தேர்தலுக்கு முன்பே வழங்காமல், கால அவகாசம் கோரியது ஏன்?” என்றும் அவர் வினவியுள்ளார்.
தேர்தல் பத்திரத் திட்டத்தை உலகின் மிகப்பெரிய ஊழல் என்று விமர்சிப்பதற்கான காரணம், இத்திட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நடமாடியது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப் புள்ள ஒப்பந்தங்களை வழங்குவ தற்காக தேர்தல் நிதி பெறப்பட்டுள் ளது என்றும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் சோத னைகள் தொடர்ந்திருந்தால் இன் னும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பெருநிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க. பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக லாபம் பெறாத நிறுவ னங்களும், பெரும் இழப்பை சந்தித்த நிறுவனங்களும் எப்படி தேர்தல் நிதியை வழங்கின என்று கேள்வி எழுப்பியுள்ள பரகலா பிரபாகர், தேர்தல் பத்திர திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி யுள்ளார்.
மேலும், தேர்தல் பத்திர திட் டத்தை ஏற்க, இந்திய ரிசர்வ் வங் கிக்கு அழுத்தம் தரப்பட்டதாகவும், ரிசர்வ் வங்கி அத்திட்டத்திற்காக விதிமுறைகளை தளர்த்தியது என் றும் அவர் கூறியுள்ளார். பி.எம். கேர்ஸ் நிதி குறித்த விவரங்களை பல்வேறு தரப்பினர் கோரியபோது, அத்திட்டத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று ஒன்றிய பாஜக அரசு கூறியதை சுட் டிக்காட்டியுள்ள அவர், பி.எம்.கேர்ஸ் நிதி மிகப்பெரிய ஊழல் என்று விமர்சித்துள்ளார்.
பி.எம்.கேர்ஸ் நிதியில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? இதுவரை எவ்வளவு பணம் செலவழிக்கப் பட்டது? எவ்வளவு பணம் மீதமிருக் கிறது உள்ளிட்ட விவரங்களை ஒன் றிய பா.ஜ.க. அரசு வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயக நாட்டில் நடைபெறும் என்றால், அது தனக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களையும், முதலமைச்சர்களை யும் மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் ஒன்றிய அரசு நடத்துவதாக குற்றம்சாட்டி யுள்ள அவர், பாஜக அரசை மீண்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு 5 கிலோ தானியங்களைக் கொடுக்கும் ஒன் றிய பாஜக அரசு, பெருமுதலாளி களுக்கு 5 விமான நிலையங்களை வழங்குகிறது என்று பா.ஜ.க.வின் மக்கள் விரோதப்போக்கை சுட்டிக் காட்டி உள்ளார்.
மேலும், ஏராளமான பொதுத் துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், அரசு சொத்துகளை தம்முடைய நண்பர்களான பெரு முதலாளிகளுக்கு பாஜக அரசு வழங் குகிறது என்றும் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் கடு மையாக விமர்சித்துள்ளார்.