நெப்டியூனுக்கு அருகே பூமி போன்ற கோள் ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

1 Min Read

அரசியல்

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் உள்ளன. இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த சூழலில் நெப்டியூன் கோளைத் தாண்டி பூமியை போன்ற புதிய கோளை ஜப்பானிய விஞ்ஞா னிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மய்யத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சூரியக் குடும்பத்தில் நெப்டி யூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக் கப்படுகிறது. இது பனிப்பொருட் களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை. இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கோள் இருக்கிறது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இது தொடர் பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சூரியக் குடும்பத்தில் 9-ஆவது கோளைக் மறைந்திருக் கிறது. அந்த கோளை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடு களை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். நாங் கள் கண்டு பிடித்திருப்பது பன்னாட்டு விஞ்ஞானிகள் கூறி வரும் 9-ஆவது கோள் கிடையாது. இது வேறு ஒரு புதிய கோள் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கோள் இருக்கிறது. சூரி யனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கோள் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் இருக்கிறது. இந்த கோள் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *