உடனே வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி,ஏப்.24- அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள் ளது. பங்குச் சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளது செபி விசாரணையில் வெளிவந்துள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதானி நிறுவன மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படும். அதானி குழுமத்தில் முதலீடு செய் துள்ள எஃப்.பி.அய். நிறு வனங்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது செபி ஆய்வில் அம்பலமாகியுள் ளது.
விதிகளை மீறி பங் குச் சந்தையில் அதானி நிறு வனம் முதலீடு செய்து முறைகேடு செய்துள்ளதை செபி கண்டறிந்துள்ளது என காங்கிரஸ் தெரிவித் திருக்கிறது.
அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 10க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் முக்கிய தகவல் களை மறைத்துள்ளன என செபி தெரிவித்திருந்தது.