புதுடில்லி, ஏப்.24- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலை யில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதில் என்ன தவறு இரு க்கிறது என்பதைக் காட்டுங்கள் என கூறியதுடன், இதுகுறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு சவால் விடுத்துள்ளார்.
18ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள் ளது. ஏற்கெனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2ஆவது கட்ட வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கருநாடகா, கேரளா, மத்தி யப் பிரதேசம், மகாராட்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடை பெறுகிறது.
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். விழாவில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘நியாய பத்ரா’ (நீதிக்கான ஆவணம்) என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ‘வர்க், வெல்த், வெல்ஃபேர்’ (work, wealth, welfare) என்பதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முழக்கம் என்று தெரிவித்ததுடன், இளைஞர்கள் குறிப்பாக பெண் களைக் கவரும் வகையிலான பல திட்டங்களும் அறிவிக்கப்பட் டது. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் நிவாரணம், வழங்கப் படும். 2025ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத் திருத்தம் செய்யப்படும், எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும், எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி மாணவர் களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும், பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப் படும், கட்சி தாவினால் பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப் படும், மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந் தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத் தில் தலையிடமாட்டோம், மக்க ளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும்.
தினசரி ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்
தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும், பிஎம் கேர்ஸ் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் விசாரணை செய்யப்படும், 21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்., மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, வெறுப்பு பேச்சு, மதமோ தல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவ டிக்கை என பல அறிவிப்புகள் மட்டுமின்றி, சிறுபான்மையினரை கவரும் வகையில், இஸ் லாமியர்களுக்கு பல சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது.
கடுமையான விமர்சனம்
இதுதொடர்பாக பாஜக வினர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் சிந் தனைகள் இருப்பதாகவும், இந்தி யாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத் துச் செல்வதே காங்கிரஸ் நோக் கம் என்று சாடி வருகிறார். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவைத் துண்டாட முயல்கிறது என்று ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த பாஜக பேரணியில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.