புதுடில்லி,ஏப்.24- பிரதமர் நரேந்திர மோடி யின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்ட னையாக மாறியிருப்ப தாக காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்திய ரயில்களின் நிலையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் காட்சிப் பதிவை ஒன்றை வெளியிட்டார்.
நாளுக்கு நாள் அதி கரிக்கும் மக்கள் தொகை, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட இட நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ரயில்வே துறைமீது சமூக வலை தளங்களில் பல்வேறு புகார்கள் குவிந்து வரு கின்றன.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நூற்றுக் கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்துவரும் காட்சிப் பதிவுகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தநிலையில் இது குறித்து காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாக மாறியிருப்பதாக விமர்சித்துள் ளார்.
பொதுப் பெட்டிக ளின் எண்ணிக்கையைக் குறைத்து, “எலைட் ரயில் களை” மட்டுமே மோடி அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக குற்றஞ்சாட்டி யுள்ளார். மேலும் பிரத மர் மோடி, அவரது கொள்கைகள் மூலம் ரயில்வே துறையை பலவீ னப்படுத்தி, அதனை அவ ரது நண்பர்களுக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக வும் ராகுல் குற்றஞ்சாட் டினார்.