நாகர்கோவில், ஏப். 24- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக உலகப் புத்தக நாள் விழா நிகழ்ச்சி எழுச்சி கரமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணி யம் தலைமையில் நடந்தது.
குமரி மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந் தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். தி.முக பொறியாளர் அணி மாவட்டத் தலைவர் இராஜேஷ் ரத்தினமணி, திராவிடர்கழக கலை இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னுராசன் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.
கலை இலக்கிய பெரு மன்ற பொறுப்பாளர் எஸ்.கே.கங்கா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய அலுவலர் (ஓய்வு) எ.ச.காந்தி, தொழிலதிபர் இராஜா,அ.தனபால், அந்தோனி பெனடிக்ட், செல்லையன் ஆகியோர் ஆரிய சூழ்ச்சிகளை முறி யடிக்கும் நூல்களை ஆர் வமுடன் வாங்கினர். பெரியாருடைய நூல்கள் மற்றும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களு டைய நூல்களையும் ஆர் வமாக வாங்கினர். மாவட்ட இளைஞரணி செயலா ளர் எஸ். அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக உலகப் புத்தக நாள் விழா
Leave a Comment