சென்னை,ஏப்.24- ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங் கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத் தள பதிவில், “ராஜஸ்தா னில் (21.4.2024) பிரதமர் மோடி பேசியது போல் வேறு எந்த பிரதமரும் இவ்வளவு மூர்க்கத் தனமான தகவல்களை கூறியதாக என்னால் நினைவு கூரமுடிய வில்லை.
அவர் கூறிய ஒவ் வொரு வாக்கியமும் முந் தைய வாக்கியத்தை முழு மையான பொய்யிலும், வெட்கக்கேடான கொடு மையிலும் மிஞ்சியதாக உள்ளது.
மக்களின் நிலம், தங் கம் மற்றும் பிற மதிப்பு மிக்க பொருட்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந் தளிப்போம் என்று காங் கிரஸ் எப்போது, எங்கு கூறியது?, தனிநபர்களின் சொத்துக்கள், பெண்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு சொந்த மான வெள்ளி ஆகிய வற்றை எப்போது, எங்கு மதிப்பிடுவது என்று கணக்கெடுப்பு நடத்தப் படும் என்று காங்கிரஸ் கூறியது?, அரசு ஊழியர் களுக்கு சொந்தமான நிலம் மற்றும் பணமும் எப்போது, எங்கு விநி யோகிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியது? என்று பா.ஜனதா உல குக்கு சொல்லுமா?
பிரதமர் தனக்கு முன் னால் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும். மன்மோகன் சிங் டிசம்பர் 2006இல் தேசிய மேம் பாட்டு கவுன்சிலுக்கு ஆற்றிய உரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் மறு பதிப்பு செய்யப்பட்டுள் ளது.
வளங்கள் மீதான முதல் கோரிக்கை ஆதி திராவிடர், பழங்குடியி னர், இதர பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையி னர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் உள் ளது என்று மன்மோகன் சிங் கூறினார்.
மோடி அவரது வார்த்தைகளை திரித்துப் பேசுவது அவதூறானது. ஏப்ரல் 21ஆம் தேதிக்குப் பிறகு விவாதத்தின் அளவு ஒரு புதிய தாழ்வுக்கு சென்றுவிட்டது. இது ஒரு அவமானம்” என்று அதில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.