புதுடில்லி, ஏப்.24 பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ராப்ரி தேவியும் பீகார் முதலமைச்சராக இருந்துள்ளார். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் லாலுவின் மூத்த மகளான மிசா பாரதியும், இரண்டாவது மகளான ரோகினி ஆச்சார்யாவும் போட்டியிடுகின்றனர்.
இச்சூழலில் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார், கத்தியார் தொகுதியில் நேற்று (23.4.2024) பிரச்சாரம் செய்தபோது, லாலுவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்து பேசினார். இதுகுறித்து லாலுவின் பெயரை குறிப்பிடாமல் நிதிஷ் குமார் பேசு கையில், “சமீப காலமாக சிலர் அனைத்தும் தமக்கு வேண்டும் என விரும்புகின்றனர். தனது பதவிபறி போனால் தமது மனைவிமார்களை அதில் அமர்த்தி விடுகின்றனர். இப்போது அவர்களின் குழந்தை களும் வளர்ந்து விட்டனர். அதிலும் அவருக்கு பல குழந்தைகள். இவ்வ ளவு அதிகமான குழந்தைகளை எவரும் பெற்றுக் கொள்வது அவசியமா? இவர்கள் குடும்ப அரசியலையும் வளர்க்கின்றனர். இப்போது அவரது மகன், மகள் என பலரும் அரசியலில் இறங்கி விட்டனர்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளரின் கேள்விக்கு லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்கும் போது, “எங்களது மதிப்பிற்குரிய முதலமைச்சர் நிதிஷ் எதை சொன் னாலும் அது எங்களுக்கான வாழ்த் தாகவே கருதுவோம். ஏனெனில், அவர் வயதிலும் மூத்தவர். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் விமர் சித்து பேசுவதால், பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. பிஜேபி யுடன் சேர்ந்ததால் இதுபோல், பேசுவதை விடுத்து அவர் மக்க ளுக்கான சேவைகள் குறித்து பேச வேண்டும். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவர், வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, வளர்ச்சி, விலைவாசி உயர்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?” என்றார். பீகாரில் 40 மக்களவைத் தொகுதி களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் ஜேடியு 16, பாஜக 17, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 5, ஜிதன்ராம் மாஞ்சியின் எச்ஏஎம் 1 தொகுதி என்ற எண்ணிக்கையில் போட்டியிடு கின்றன. இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி 26, காங்கிரஸ் 9, சிபிஅய் (எம்எல்) 3, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.