புதுடில்லி, ஏப்.24- டில்லியில் மண்டை ஓடுகளுடன் தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருடன் நடந்த தள்ளு முள்ளுவில் விவசாயிகள் காயம் அடைந் தனர்.
மீண்டும் போராட வந்தனர்
டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் நடத்திய போராட் டம் நாடு முழு வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவசாயிகள் குழு மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக டில்லி வந்துள்ளது. ஜாதிவாரி கணக் கெடுப்பு, குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட வந்துள்ளனர். இவர்களுக்கு இன்று (24-4-2024)) முதல் 2 நாள் போராட்டத்துக்குக் காவல் துறையினர் அனுமதி வழங்கினர்.
போராட அனுமதிக்கவில்லை காவல்துறையினர்
ஆனால், விவசாயிகள் நேற்றே
(23-4-2024) ஜந்தர் மந்தரில் குவிந்து விட்டனர். ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 100 பேர் அங்கு திரண்டதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அங்கு போராட அனுமதிக்கவில்லை.
இருப்பினும் விவசாயிகள் அங்கிருந்து சாலையில் மண்டை ஓடுகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். சிலர் எலும்புத் துண்டுகளை வாயில் கடித்திருந்தனர். பெண் விவசாயி ஒருவர் மாராப்பு கட்டி பங்கேற்றார்.
பெண் ஒருவர் இப்படி நின்றதைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதனை அவமதித்து பேசியுள்ளார். இதனை விவசாயிகள் தட்டிக் கேட்டுள் ளனர். அப்போது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக் குவாதம் முற்றி தள்ளு-முள்ளு ஆனது.
இதில் உமாராணி, சந்திரா, உத்தண் டன், திருமுருகன் ஆகியோர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
இதற்கிடையே, விவசாயிகளுக்கு போராட அனுமதி வழங்கலாமா?, வேண் டாமா? என காவல்துறையினர் ஆலோ சித்தனர். இதன்பேரில் காவல் நிலையத் துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக விவசாயிகள் கூறுகையில், “விவசாயிகளின் கோரிக்கையை நிறை வேற்றுவதாக பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அறிவிக்க வில்லை. இதனால்தான் போராட வந் தோம். அடுத்ததாக மற்ற விவசாய பிரதி நிதிகளையும் அழைத்து வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்றனர்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து டில்லியில் மண்டை ஓடுகளுடன் போராட்டம்
Leave a Comment