என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரதமர் மோடி மீது நடவடிக்கை

தேர்தல் ஆணையத்திடம் 20 ஆயிரம் பேர் வலியுறுத்தல்-தொடர்ந்து புகார்கள் குவிகின்றன!

புதுடில்லி, ஏப். 24- வெறுப்பு பேச்சு பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் புகார் மனுக் களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, இஸ் லாமிய மக்களுக்கு எதிரான கருத்துக் களை தெரிவித்து வருவதற்கு அரசியல் கட்சியினர், இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல், மதச்சார்புடன் நடந்து கொள்ளும் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெறுப்பு பேச்சு பேசி வரும் பிரதமர் மோடி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், உச்சநீதிமன்றத்துக் கும் அரசியல் கட்சியினர்வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத் துக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

காங்கிரஸ் புகார் மனு!

சம்விதான் பச்சாவோ நாகரிக் அபி யான் அமைப்பு மூலம் 17 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் கையெழுத் திட்ட புகார் மனுக்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. மற்றொரு அமைப்பு மூலம் 2 ஆயிரத்து 209 பேர் கையெழுத் திட்ட மனுக்களும் தேர்தல் ஆணையத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பலர் இ-மெயில் மூலமும் பலர் புகார்களை அனுப்பி வருகிறார்கள்.
வெறுப்பை பரப்பும் வகையில் பேசி யதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது. பிரதமர் மோடி, ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய போது ‘‘காங் கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத் தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள், அவர்கள் இந்தச் செல் வத்தை அதிக குழந்தைகளைப் பெற்ற வர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுத்துவிடும். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப்போகிறீர்களா?

மேலும், மன்மோகன் சிங் தலைமையி லான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய் மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல் யத்தைக் கூட விட்டு வைக்காது.” இவ் வாறு பிரதமர் மோடி பேசினார். மத ரீதியாக பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலை யில், பிரத மரே மதத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வெறுப்பைபரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் நேற்று
(23.04. 2024) புகாரளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு தாக்கீது அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் முறையிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *