பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல! முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை

2 Min Read

புதுடில்லி,ஏப்.24 முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிப்பதாக தேர் தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால், உண்மை நிலை என்ன?
2001 முதல் 2011 வரையிலான பத் தாண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி என்பது, அதற்கு முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகையில் குறைந்திருக்கிறது
நாடு விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக, முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது இந்தப் பத்தாண்டுகளில் தான்!

உதாரணமாக, 1961 இல் முஸ்லிம் மக்கள் தொகை 4.69 கோடி. அதற்கு முந்தைய பத்தாண்டுகளை ஒப்பிடுகையில்,இது 32.49 சதவீதம் அதிகம். 2001 இல் முஸ்லிம் மக்கள் தொகை 13.82 கோடி.
அதற்கு முந்தைய பத்தாண்டு களைவிட 29.52 சதவீதம் அதிகம். 2001-2010 ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 24.6 சதவீதம் ஆக உள்ளது
முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்படுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.

கடைசியாக எடுக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கீட்டின்படி முஸ்லிம்களின் மக்கள் தொகை தற்போது 17.2 கோடி – ஆனால் வளர்ச்சி விகிதம் என்பது 14.2 சதவீதமாக சரிந்துள்ளது. முஸ்லிம்களிடையே கல்வி யில் ஏற்பட்ட வளர்ச்சி, குழந்தைப் பேற்றைக் கட்டுப்படுத்தி இருக்கிறது இதன் மூலம் புலனாகிறது.
கடந்த 2001 இல் 82.76 கோடியாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை, தற்போது 96.63 கோடியாக அதிகரித்திருக்கிறது. சதவீத அடிப்படையில் இது 16.76 சதவீத வளர்ச்சி. முந்தைய பத்தாண்டுகளைக் காட்டிலும் இது குறைவு ஆகும்.

மொத்த மக்கள் தொகையில் கிறிஸ் தவர்களின் நிலையில் மாற்றமில்லை, பத்தாண்டுகளுக்கு முன்பும் அவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம்தான், இப் போதும் அதே தான். மாற்றம் ஏதும் இல்லை என்று சொல்லி இருக்கிறது ஒன்றிய அரசு.

இந்துக்களோ, முஸ்லிம்களோ அல்லது பிற மதத்தவரோ மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இயன்றளவு கவனம் செலுத்தி இருக்கிறார்கள் என்பது இந்தப் புள்ளிவிவரம் காட்டும் உண்மை.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம் வளர்ச்சி விகிதங்கள் சற்றேறக்குறைய ஒரே அளவில் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. அடுத்துவரும் பத்தாண்டு களில் ஒன்றோடொன்று சமமாக வளர்வது வெளிப்படையாகத் தெரியவரும்.

உண்மை இவ்வாறு இருக்கையில், முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக் கிறது என்று பிரதமராக இருக்கக்கூடியவர் கூறுவது எந்த நோக்கத்தில்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *