மத உணர்வைத் தூண்டும் பிரதமர்!

2 Min Read

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? – முதலமைச்சர் கண்டனம்

சென்னை,ஏப்.23- மத உணர்ச்சிகளை பிர தமர் மோடி தூண்டிவிட்டு வெறுப்பு பேச்சு மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்விகளை தவிர்க்கப் பார்க்கிறார் எனவும், மோடியின் இத்தகைய வெறுப் புணர்வு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாங்காதது போல் நடுநிலை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது என தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடந்த பாஜக கூட்டத் தில் உரையாற்றிய பிரதமர் மோடி இசு லாமிய மக்களுக்கு எதிராக வெறுப்பு ணர்வை தூண்டும் வகையில் பேசியுள் ளார். மக்களின் சொத்துகளை பறித்து, அதிக குழந்தைகளை வைத்திருக்கும் இசுலாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்துவிடும் என பிரிவினையை தூண்டும் வகையில், அப்பட்டமான பொய்யான ஒரு கருத்தை மக்கள் மன தில் விதைக்க முயற்சித்துள்ளார்.
இதனிடையே, மதமோதல்களை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பதாக எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப் பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதற்கட்ட தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்ன டைவை ஏற்படுத்தி இருப்பதாக தக வல்கள் வந்தபிறகு, மீண்டும் ஒரு தரம்தாழ்ந்த அரசியலை மோடி கையில் எடுத்திருப்பதாக அனைத்துத் தரப்பி னரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தோல்வி பயத்தில் காங்கிரஸ் மற் றும் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை மோடி பரப்புவதா கவும் குற்றம் சாட்டியுள்ளனர்.பத் தாண்டுகள் பிரதமராக இருந்தவரின் ரத்தவெறி குறையவில்லையா எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள் ளன.
இதுகுறித்து நேற்று (22.4.2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் சமூக வலைத்தளப் பதிவு வரு மாறு:
பிரதமர் நரேந்திர மோடி அவர்க ளின் நச்சுப் பேச்சு இழிவானதும் மிக வும் வருத்தத்திற்குரியதும் ஆகும். தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சி களைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல் வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடி யின் அசலான உத்தரவாதங்கள்.

பிரதமரின் நச்சுப் பேச்சு இழிவானது! வருத்தத்திற்குரியது!
அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என் பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது.

பின்தங்கிய வகுப்பினருக்கு உரியபங்கு கிடைக்காமல் செய்கிறார் மோடி!
இந்தியா கூட்டணி வாக்குறுதி யளித்துள்ள சமூக-பொருளாதார மக் கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவ தற்கான வழிமுறையாக நெடுநாட்க ளாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும்.
அதற்குத் தவறான பொருள் கற் பித்து, பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகி யவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் பிரதமர் மோடி.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பா.ஜ.க.வின் வஞ்சகமான திசைதிருப்பும் தந்திரங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நமது முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *