அய்தராபாத், ஏப்.23 17 மக்களவைத் தொகுதிகள் உள்ள தெலங்கானா வில் மே மாதம் 13 அன்று ஒரேகட் டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மாநிலத்தின் தலைநகர் அய்தராபாத்தில் மாதவி லதா பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 17 அன்று ராமநவமி நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அய்த ராபாத்தின் மத்தியப் பகுதியில் மசூதியை நோக்கி வில், அம்புகளை ஏவுவதுபோல் சைகை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாஜக வேட்பாளர் மாதவி லதாவுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில், மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் சைகை காட்டியது தொடர்பாக அய்தராபாத்தைச் சேர்ந்த ஷேக் இம்ரான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், மாதவி லதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295 – ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஷேக் இம்ரான், மாதவி லதா மீது தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.
அய்தராபாத்: மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை பா.ஜ.க. பெண் வேட்பாளர் மீது வழக்கு

Leave a Comment