தேவகோட்டைநகர திராவிடர் கழக செயலாளராக இருந்த வி. முத்தரசு பாண்டியன் என்பவர் கழகக் கொள்கைக்கும், கட்டுப்பாட்டிற்கும் விரோதமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார் என்ற செய்தி தெரிய வந்தது. இது கழகக் கட்டுப்பாட்டிற்கு எதிரானது என்ற அடிப்படையில் கழகப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
தேவகோட்டை நகர திராவிடர் கழகத்திற்கு புதிய செயலாளராக தோழர் ந. பாரதிதாசன் நியமிக்கப்படுகிறார்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)