முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெறுகிறார்களாம் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சைத் தொடங்கினார் மோடி

2 Min Read

ஜெய்ப்பூர், ஏப். 22 மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையின ருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட தாக மோடி கூறுவதன் பின்னணி என்ன?
மன்மோகன் சிங் ஆட்சியில் சிறு பான்மையினருக்கு முன்னு ரிமை அளிக் கப்பட்டதாக மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநி லம் பன்ஸ்வாரா-வில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி நாட்டின் சொத்துக்கள் வளங்கள் அனைத் தும் சிறுபான்மையினருக்கு வாரி வழங்கப்படும். சொத்தில் பெண் களுக்கு சமஉரிமை என்று கூறி வரும் காங்கிரஸ் கட்சி யாருக்கு அந்த சொத்தை பிரித்து தருவார்கள்?

மன்மோகன் சிங் அரசு முஸ்லீம் களுக்குத் தான் இந்த நாட்டின் சொத்தில் முன்னுரிமை வழங்கப் படும் என்று ஏற்கெனவே கூறியுள் ளது. அதனால், அதிக குழந்தை களைப் பெற்றவர்களுக்கு முசுலிம் களுக்கு தான் சொத்துக்கள் அனைத்தும் போய் சேரும் என்று பிரதமர் மோடி பேசினார்.

மோடியின் கண்ணியமற்ற பேச்சை…

பிரதமர் மோடியின் இந்த கண் ணியமற்ற கீழ்த்தரமான பேச்சை அரசியல் கட்சிகள் கண்டித்து வரும் அதேவேளையில் சிறுபான் மையினர் நலன் குறித்து மன் மோகன் சிங் கூறியதை நினைவு கூர்ந்துள்ளனர். “இந்தியப் பொருளாதாரத்தின் மிகச் சிறந்த செயல்திறன் மற்றும் பொரு ளாதாரம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வகையில் அனைத்துப் பிரிவினருக்கும் புதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க நலிவடைந்த மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் நல னில் சிறப்பு கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப் பாகும்.
சமூகத்தின் சிறந்த பிரிவினர் இந்த செயல்முறையால் பயனடை வார்கள் என்றாலும், “இந்தியா பிரகாசிக்க வேண்டும், அனைவரும் பிரகாசிக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் விவசாயம், நீர்ப் பாசனம் மற்றும் நீர் வளம், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள் கட்டமைப் பின் அத்தியாவசிய பொது முதலீட் டுத் தேவைகள், எஸ்.சி., எஸ்.டி.,க்கள், பிற பிற்படுத் தப்பட்ட வகுப்பினரை மேம்படுத் துவதற்கான திட்டங்களுடன், சிறு பான்மையினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று மன்மோகன் சிங் அப்போது கூறியிருந்தார்.

மன்மோகன் சிங்-கின் இந்த பேச்சை திரித்து கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆட்சியில் மேற் கொண்ட சாதனைகளை கூறாமல் மூன்றாம் தரத்துக்கும் கீழான அரசியல்வாதியாக மக்களி டையே பிரிவினையை தூண்டும் விதமாக பேசிவரும் பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *