அரசமைப்பை மாற்ற விரும்பும் பா.ஜ.க. அரசு : பிரியங்கா காந்தி சாடல்

viduthalai
2 Min Read

காங்கர், ஏப்.22 ஒன்றிய பாஜக அரசு அரசமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
வரும் 26 ஆம் தேதி 18-ஆவது மக்களவைத் தேர்தலின் 2ஆ-ம் கட்ட தேர்தலில் சத்தீஷ்கர் மாநிலத்தின் காங்கர் மக்களவைத் தொகுதிக்கு வாக் குப்பதிவு நடைபெறுகிறது. காங்கர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரேஷ் தாகூரை ஆதரித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று (21.4.2024) அங்குப் பிரச்சாரம் செய்தார்.

பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி,
“அரசமைப்பு உங்களுக்கு வாக்களிக் கும் உரிமையை வழங்கியுள்ளது; இட ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது; பழங் குடியினரின் கலாச்சாரத்தைப் பாது காப்பதை உறுதி செய்துள்ளது; தாழ்த் தப்பட்டோரின் வளர்ச்சியை எளிதாக்கியுள்ளது. ஆனால் பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு அரச மைப்புச் சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறது. அரசமைப்பில் ஏற்படும் எந்த மாற்றமும் அனைவரையும் பாதிக்கும். கேள்விகள் கேட்பது உட்பட அவர்களின் உரிமைகள் இழக்கப்படுவதால், மக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ முடியாமல் போகும். பா.ஜனதா தலை மையிலான ஒன்றிய அரசின் நோக்கம் சரியானதல்ல. அரசியலைக் காட்டுவது, நாட்டில் பிரபலமடைந்துவிட்டது. இன்று, ஒரு தலைவர் பூஜை செய்யும் போது, கேமரா இருக்க வேண்டும், அதைத் தொலைக்காட்சியில் காட்ட வேண்டும் என்கிற நிலை உள்ளது.இந்திரா காந்தி (மேனாள் பிரதமர்) வழிபாடு செய்ய ஒரு பூஜை அறை இருந்தது. ஆனால் அவர் அதைத் தனிமையில் செய்தார். அதை வெளிக் காட்டிக் கொள்ள அல்ல. மதத்தை அரசியலில் பயன்படுத்தக்கூடாது. அது நமது பாரம்பரியம் அல்ல.
பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு, பிரதமர் மோடியின் சில தொழிலதிபர் நண்பர்களுக்காக மட் டுமே செயல்படுகிறது. இது உங் களுக்காக (குடிமக்கள்) வேலை செய்திருந்தால், உங்கள் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டிருக்கும். மோடியின் அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. உங்கள் வாழ்க்கை மாறிவிட்டதா?

சிறுபான்மையினருக்கு முன்னுரிமை

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவராக மாறிவிட்டார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். அப்படி இருந்தால் அவர் ஏன் வேலையில்லாத் திண்டாட்டத் தைக் குறைக்கவில்லை? பணவீக்கத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை? தொழி லதிபர் நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைப் பிரதமர் தள்ளுபடி செய்தார்” என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *