யாருக்கு வாக்களித்தீர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் வந்த அலைபேசி. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 19.04.2024 அன்று இரவு மற்றும் 20.04.2024 அன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் செல்போனுக்கு 91186508186 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இது பஞ்சாப் மாநிலம் பதான் கோட் என்ற பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய நகரத்தில் பதிவு பெற்ற எண் என்று காண் பித்தது. அதில் பேசும் ஒரு பெண் மணி தமிழில் உங்கள் நாடாளுமன்ற தொகுதியில் நீங்கள் எந்த வேட்பா ளருக்கு வாக்களித்தீர்கள்? பாஜக விற்கு என்றால் எண் 5 அழுத்துங் கள், திமுக என்றால் எண் 6 அழுத்துங்கள் என்று கூறி பெயரை யும் எண்ணையும் சொன்னது.ஒவ்வொரு வேட்பாளர்களின் சொல்லி அவர்களுக்குரிய சொல்லி பட்டனை அழுத்த சொன்னது.
அதற்கு பெரும்பாலான வாக்கா ளர்கள் பட்டனை அழுத்தினர். சிலர் அந்த எண்ணை துண்டித்து விட்டனர். அப்படி துண்டித்தவர் களின் எண்களுக்கு மீண்டும் மீண் டும் அழைப்பு வந்தது.
தேர்தல் ஆணையம் இது போன்று வாக்காளர்களை தொடர்பு கொண்டு கேட்பதில்லை, ஏனென்றால் யாருக்கு வாக்களித் தீர்கள்? என்று கேட்பது தவறு.
தனியார் அமைப்புகள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது சட்டவிரோதம் ஆகும். வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஜூன் 3 ஆம் தேதி மாலை வரை எந்த கருத்துக் கணிப்பு குறித்து ஆய்வு எடுக் கவோ அல்லது வெளியிடுவோ கூடாது என்றும், அப்படி எடுப்பது சட்டவிரோதம் என்றும் உள்ள நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அதுவும் இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள நகரத்தில் இருந்து இது போன்ற கருத்துக்கணிப்பு ஈடுப்பட்டுள்ள னர். ஏற்கெனவே தேர்தல் ஆணை யம் எந்த ஒரு புகார் எடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப் பாக ஒன்றிய பாஜகவினர் எந்தவித நடவடிக்கையில் ஈடுபட்டாலும் சட்டவிரோத மவுனமாக இருக்கும் தேர்தல் ஆணையம் இந்த விவ காரத்திலும் குறட்டை விடுவது ஏன்?
இது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியுமா? வாட்ஸ் அப்பில் வாக்கு செலுத்தியது. குறித்த படத்தை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் அப்பட்டமான விதி மீறல்களில் ஈடுபட்ட இந்த அழைப்பு, அதன் பின்னால் உள்ள அமைப்புகள் குறித்து மவுனம் சாதிப்பது முறையல்ல!
அதே போல் தேர்தலுக்கு முன்பு 12.04.2024 மற்றும் 15.04.2024 அன்று நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கூறி, முதலில் பாஜகவிற்கு வாக்களிக்க 3 என்ற எண்ணை அழுத்துங்கள், திமுக விற்கு வாக்களிக்க 7 என்ற எண்ணை அழுத்துங்கள் என்று அழைப்பு வந்தது.
12.04.2024 11.45 8031259097
15.04.2024 12.36 8031270547
இதனைத் துண்டித்தால் மீண் டும் வேறு எண்ணில் இருந்து அழைப்பு வந்து இதே போல் கேள்விகளைக் கேட்டது!