சென்னை,ஏப்.22- இன்ஃபோசிஸ் இணை நிறுவன ரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷன் சிறீ – கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 2024அய் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை 20.4.2024 அன்று வழங்கி கவுரவித்தது.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதானது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் குறிப்பாக மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருதை, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. மோகன், துணைத் தலைவர்டாக்டர் ரஞ்ஜித் உன்னிகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா ஆகியோர் முன்னிலையில் சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நீரிழிவு அருங்காட்சியகமான ‘மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நீரிழிவு அருங்காட்சியகம்’ திறப்பு விழா நடைபெற்றது. இந்த அருங்காட்சியகம் சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சி யகத்தை கிரிஸ் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நீரிழிவு ஆராய்ச்சிக்கான உலக புகழ்பெற்ற மய்ய மாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள நீரிழிவு அருங்காட்சியகம், நீரிழிவு ஆராய்ச்சியின் பல ஆண்டு கால வரலாற்றைச் சிறப்பிக்கும் மற்றும் விவரிக்கும் தனித்துவமான அருங்காட்சியகமாக இருக்கும்.
அதன் ஆரம்பகால சிகிச்சை, கடந்து வந்த பாதை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள மூத்த விஞ்ஞானிகளின் பிற தொழில்நுட்ப முன்னேற் றங்கள் ஆகியவையும் இங்கு இடம் பெற்றுள்ளன.
டில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில்
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு காங்கிரஸ் அறிவிப்பு
புதுடில்லி, ஏப்.22- டில்லி மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கு மகேஷ் கிச்சி என்ப வரையும், துணை மேயர் பதவிக்கு ரவீந்தர் பரத்வாஜு என்பவரையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் டில்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேயர் தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக டில்லி காங்கிரஸ்
கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான அனில் பரத்வாஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் டில்லியில் கூட்டணி அமைத்துப் போட்டி யிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.