பெங்களூரு, ஏப்.22- பெங்களூரு வில் பாரதீய ஜனதா மாநில செய லாளரிடம் ரூ.2 கோடி சிக்கியது. இதுதொடர்பாக காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருநாடகத்தில் வருகிற 26 ஆம் தேதி நாடாளுமன்ற தேர் தலுக்கான முதல்கட்ட வாக் குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லும் பொருட்கள், பணம் ஆகி யவை பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரு பின்னிமில் அருகே ஏ.பி. எம்.சி. பகுதியில் வணிக வளாகம் எதிரே உள்ள சோதனைச் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்தக் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப் போது அந்த காரில் ரூ.2 கோடி இருந்தது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்தவர் களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது காரில் இருந்தவர் லோகேஷ் அம்பகல்லு என்பதும், அவர் பாரதீய ஜனதா மாநில செயலாளர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர், வங்கியில் இருந்து பணத்தை எடுத்து சென்றதும், அதற்கான ஆவணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. எனினும் பெரிய தொகை என்பதால் அந்த பணம் குறித்து உடனடியாக வருமான வரித்துறைக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். மேலும் பணத்தையும் பறி முதல் செய்தனர்.
இதுதொடர்பாக பாரதீய ஜனதா மாநில செயலாளர் லோகேஷ் அம்பகல்லு, ஓட்டு நர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் கங்காதர் ஆகிய 3 பேர் மீது காட்டன் பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.