சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை! டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப். 22- “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “நான் உட்கொண்ட உணவு, எனது மருத்துவர் தயாரித்து கொடுத்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகிறது” என்று நீதிமன்றத் தில் விளக்கம் அளித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி மான் நீதிமன்றத்தில் கூறுகையில், “நான் (அர விந்த் கெஜ்ரிவால்) பிணை பெறு வதற்காக எனது ரத்தத்தின் சர்க் கரை அளவினைகூட்ட முயற்சிப்ப தாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது. பிணை பெறுவதற் காக முடங்கிப்போகும் அபாயத்தை நான் எடுப்பேனா? நான் எடுத்துக் கொண்ட உணவு அனைத்தும் கைதுக்கு முன்பாக எனது மருத் துவர் தயாரித்துக் கொடுத்த டயட் அட்டவணைபடியே வழங்கப்பட்டது.

நான் மாம்பழங்கள் சாப்பிட் டேன் என குற்றம்சாட்டப்பட்டுள் ளது. எனக்கு வீட்டில் இருந்து 48 முறை அனுப்பப்பட்ட சாப்பாட்டில் மூன்று முறை மட்டுமே மாம்பழம் இருந்தது. ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு பின்னர் மாம்பழம் அனுப்பப்படவே இல்லை. மாம்பழங்கள் இனிப்பு வில்லைகள் போல தயார் செய்யப் பட்டிருந்தன. அதன் சர்க்கரை அளவு, பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியின் சர்க்கரை அளவை விடக் குறைவானது.

நான் எனது தேநீருக்கு செயற்கை சர்க்கரையையே பயன் படுத்தினேன். அமலாக்கத் துறை யால் எவ்வளளவு அபத்தமாக, சிறுமையாக அரசியல் செய்ய முடிகிறது. அவர்களின் அறிக்கை முற்றிலும் தவறானதாகவும், தீங் கிழைப்பதாகவும் உள்ளது. உங் களுக்கு அதிக செல்வாக்கு உள்ள தால், வீட்டிலிருந்து ஒரே முறை அனுப்பப்பட்ட வழிபாட்டு உணவை நான் ஆலு பூரி சாப் பிட்டதாக ஊடகங்களில் வெளியிட முடிகிறது.

நான் கைதியாக சிறையில் இருப் பதால் கண்ணியமான, ஆரோக்கிய மான வாழ்க்கை வாழ எனக்கு உரிமை இல்லையா?15 நிமிடம் காணொலி மூலமாக எனது மருத் துவரிடம் பேசக் கூட அனுமதி கொடுக்க முடியாத அளவுக்கு நான் கொடுங்குற்றவாளியா? 75 ஆண்டு களாக நம்மிடம் ஜனநாயகம் இருந் தது. ஆனால், இப்படி ஒரு அணுகு முறையை முதல் முறையாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

கெஜ்ரிவாலின் வழக்குரைஞ ரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, “அரவிந்த் கெஜ் ரிவால் சாப்பிட்ட உணவு அவரது மருத்துவர் தயாரித்த டயட் அட்ட வணையுடன் ஒத்துப்போக வில்லை” என்று குற்றம்சாட்டியது. மேலும், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவை பராமரிக்கும் அளவுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் திகார் சிறையில் உள்ளன” என்று தெரிவித்தது.

திங்கள்கிழமை முதல் தனது மருத்துவரிடம் நாள்தோறும் மருத் துவ ஆலோசனை பெற அனுமதி கோரிய கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பினை ஒத்திவைத்த நீதிமன் றம், தேவைப்பட்டால் சனிக்கிழ மைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, தனது ரத்ததின் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தனது மருத்துவரிடம் வாரத்தில் மூன்று நாட்கள் கலந்தா லோசிக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவை அண்மையில் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார். சர்க்கரை அளவு தொடர்பாக தனது மருத்துவரிடம் நாள்தோறும் 15 நிமி டம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோரி புதிய மனுவை கடந்த 19.4.2024 அன்று கெஜ்ரிவால் தாக் கல் செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *