பா.ஜ.க. மாநிலத்தில் தேர்தல் நேரத்திலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை

1 Min Read

பட்டப்பகலில் காவல்துறையினர் முன்பே பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர்கள்

போபால், நவ.21  மத்தியப் பிரதேசம் போபாலில் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பள்ளிமாணவியை இரண்டு இளைஞர்கள் கடத்திச்சென்றனர். இந்த நிகழ்வை பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்தவர்கள்  பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். 

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் நகா சந்திரவதனி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் வழக்கம் போல், பலர் பெட்ரோல் போட்டபடி இருந்தனர். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென சிறுமி ஒருவரை கடத்திச் சென்றனர். அவர்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்தும் மற்றொருவர் முகம் தெரியாத வகையில் துணியால் மறைத்தும் வந்தி ருந்தனர். அந்த சிறுமி அலறியபோதும், அருகே இருந்தவர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

சிறுமியை கட்டாயப்படுத்தி, இழுத்து சென்ற நபரொருவர் பின்னர் சிறுமியை தூக்கி, இரு சக்கர வாகனத்தில் அமர வைக்கிறார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன்பின் அந்த நபர், இரு சக்கர வாகனத்தில் அமர்வதற்குள்  வாகனம் முன்னே செல்கிறது. இதனால், சிறுமியை பிடித்தபடி பின்னாலேயே ஓடுகிறார். பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் சிலர் இதனை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இதுபற்றி ஏ.எஸ்.பி. ரிஷிகேஷ் மீனா கூறும்போது, சிறுமிக்கு வயது 19   என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடு பட்டு வருகின்றனர். சிறுமியின் இருப் பிடம் பற்றி கண்டறியும் முயற்சியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார். இந்த கடத்தல் கொடூரம் நிகழ்ந்த இடத்திற்கு எதிர்தரப்பில் காவல்நிலையம் ஒன்றும் உள்ளது, இருப்பினும் யாருமே அந்தச் சிறுமியைக் காப்பாற்றவோ, அல்லது காவல்நிலையத்தில் ஓடிச்சென்று புகார் கொடுக்கவோ முன்வரவில்லை. சமீபத்தில் அங்கு வாக்குப்பதிவு நடந்துமுடிந்தது, டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு மாணவி கடத்தல் நிகழ்வு நடந்துள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *