ம.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 21- காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ளர்ஜெய்­ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்­தில், “மத்­தி­யப் பிர­தே­சத்­தில் நடை­பெற்ற வினாத்­தாள் கசிவு மற்­றும் ஆள்­சேர்ப்பு ஊழல்­க­ளில் பிர­த­மர் மோடி யாரைப் பாது­காக்­கி­றார்? பா.ஜ.க. வன உரி­மைச் சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வ­தில், ஆதி­வா­சி­களை ஏன் கைவிட்­டது? மத்­தி­யப் பிர­தே­சத்­தில் தாழ்த்தப்பட்டவர்­க­ளுக்கு எதி­ரான குற்ற விகி­தங்­கள் அதி­க­ள­வில் உள்­ளது ஏன்?” எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.
அதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்­தில் விளக்­க­ம­ளித்­துள்ள அவர்,

பழங்­குடி மக்­க­ளுக்கு வனத்­தின் மீதான உரி­மையை மீட்­டெ­டுக்­கும் வகை­யில் கடந்த 2006-ஆம் ஆண்டு காங்­கி­ர­ஸால் வன உரி­மைச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால், பா.ஜ.க. அதை அமல்­ப­டுத்­து­வதை தடுத்துகோடிக் கணக்­கான ஆதி­வா­சி­க­ளின் நன்­மை­க­ளைப் பறித்­துள்­ளது. மத்­தி­யப்பிர­தே­சத்­தில் ஆட்­சி­யில் இருந்தபா.ஜ.க.அரசு ஏன் ஆதி­வா­சி­க­ளின் உரி­மை­களை வழங்­கத் தவ­றி­விட்­டன?

2021-ஆம் ஆண்­டில் தாழ்த்தப்பட்ட­வர்­க­ளுக்கு எதி­ரான குற்ற விகி­தம் 63.6 ஆக இருந்­தது, இது தேசிய சரா­ச­ரி­யான 25.3 ஆக இருந்­தது. அதே போன்று2019 மற்­றும் 2020-ஆம் ஆண்­டு­க­ளில் தாழ்த்தப்பட்ட­வர்­க­ளுக்கு எதி­ரான அதிககுற்ற விகி­தங்­களை இந்த மாநி­லம் பதிவு செய்­துள்­ளது. தாழ்த்தப் பட்ட­வர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் ஆண்­டுக்கு ஆண்டு அதி­க­ரித்து வரு­வது வெட்­கக்­கே­டா­னது.

பா.ஜ.க.இரண்டு தசாப்­தங்­க­ளுக்­கும் மேலாக மத்­திய பிர­தே­சத்­தில் ஆட்­சி­யில் உள்­ளது. தாழ்த்தப்பட்டவர்­கள்தங்­கள் பாது­காப்பு குறித்து ஏன் அதி­க­மாக அஞ்ச வேண்­டும்? தாழ்த்தப்பட்ட­வர்­கள் அனு­ப­ வித்த எண்­ணற்ற கொடு­மை­க­ளுக்­காக பிர­த­மர் மோடி வெட்­கப்­ப­ட­வில்­லையா? இந்த விவ­கா­ரத்­தில் பிர­த­மர் மோடி மவு­னம் கலைக்க வேண்­டும்” என்று ஜெய்­ராம் ரமேஷ் கூறி­யுள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *