கருநாடகாவில் பா.ஜ.க. மேடையில் மோடி முன்னிலையில் காங். விளம்பரத்தை காட்டிய தேவேகவுடா

viduthalai
1 Min Read

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கர்நாடகம் தரும் நூறு ரூபாயில் வெறும் 13 ரூபாயை மட்டும் வரி பங்காக திருப்பித் தரும் ஒன்றிய அரசின் போக்கை கர்நாடக காங்கிரஸ் சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மோடியின் வடை தமிழ்நாட்டில் பிரபலமாக இருப்பதைப் போல, பெரிய சொம்பு படத்தைக் கன்னடப் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் நேற்று கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் தேவகவுடா மேடையிலேயே அந்த விளம்பரத்தைச் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் விளம்பரத்தைப் பா.ஜ.க.வின் தேர்தல் மேடையில் காட்டி, அதற்கு மேலும் விளம் பரம் தேடித்தந்த தேவகவுடாவின் செயலைச் சமூக ஊடகங்கள் கிண்டலடித்து வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *