புதுடில்லி, ஏப்.21 இந்தியாவின் முதல் பத்தாயிரம் பெரும் பணக் காரர்களின் சராசரி வருவாய் ரூ.48 கோடி. இது இந்திய சராசரி வரு வாயைவிட 2069 மடங்கு அதிகம்.
கடந்த நிதியாண்டில்(2022-2023) இந்தியாவின் முதல் ஒரு விழுக்காடு பணக்காரர்களிடம் 40.1 விழுக்காடு செல்வம் குவிந்திருக்கிறது. இது வர லாற்றிலேயே அதிகபட்ச வேறுபாடு.
அதோடு, கடந்த நிதியாண்டில் இந்தியாவின் முதல் ஒரு விழுக்காடு பணக்கார்களுக்கு நாட்டின் வரு வாயில் 22.6 விழுக்காடு சென்றிருக் கிறது; இது உலகின் ஒட்டுமொத்த நாடுகளிலேயே உச்சபட்சமாகும்.
இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு உச்ச வருவாய் பிரிவில் இருக் கும் 10 விழுக்காடு பணக்கார்களின் வருவாய் 60 விழுக்காடு அதிகரித் திருக்கிறது. அதே நேரத்தில் அடித் தட்டில் இருக்கும் 50 விழுக்காடு ஏழைகளின் வருவாய் மிக மோச மான நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார ஏற் றத்தாழ்வுகள் குறித்து வெளியாகி யிருக்கும் “த ரைஸ் ஆப் பில்லனி யரே ராஜ் (‘‘பெருமுதலாளிகளின் எழுச்சி”) என்ற அறிக்கையில் சில அதிர்ச்சிகரமான தகவல்களை ‘‘டவுன் டூ எர்த்” இதழ் மேற்கண்டவாறு பட்டியலிடுகிறது.
ஆக மொத்தத்தில், ஒருவர் ஏழையாகவோ அல்லது அம்பானி, அதானியாகவோ இருப்பது அவரின் உழைப்பைப் பொறுத்தது அல்ல. மாறாக, அரசு அவ்வப்போது யாரைத் தனது நண்பர்களாக வைத்துக்கொள்கிறது என்பதாலும், அது சார்ந்து முன்னெடுக்கும் பொரு ளாதாரக் கொள்கைகளாலுமே தீர் மானிக்கப்படுகிறது.