மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மாநில முதலமைச்சரான மோகன் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தி நமது மதத்தையும், இளைஞர் சக்தியையும், பெண்களையும் இழிவுபடுத்தி வருகிறார். கடந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் தோல்வி அடைந்ததால், தென் மாநிலமான கேரளாவுக்குச் சென்றார். எதிர்காலத்தில் இந்தியாவில் அவருக்கு பாதுகாப்பான தொகுதி இருக்காது. அதனால் கடல் தாண்டி சென்று வேறு எங்காவது போட்டியிட வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார்.
பிஜேபி என்பது ஆணவத்தின் உச்சாணிக்கிளையில் தொங்குகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும். அடுத்த தேர்தலில் பிஜேபி என்று ஒன்று இருந்தால், அது இந்தியாவில் போட்டியிடட்டும். மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஒன்றை ஒப்புக்கொண்டு இருக்கிறார். கடல் தாண்டிக் கூட ராகுல் காந்தி தேர்தலில் நின்று வெற்றி பெறும் சக்தி உடையவர் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்
ஆணவமே, உன் பெயர் தான் பிஜேபியா?