பெங்களூரு, ஏப். 20- கருநாடகா மாநிலத் தின் மேனாள் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்களான மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
கட்டேதார் கலபுரகி மாவட் டத்தின் அஃப்ஜல்புர் தொகுதியில் இருந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டவர். கருநாடகா மாநில மேனாள் அமைச்சரும் ஆவார்.கலபுரகி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லி கார்ஜூன கார்கேயின் சொந்த மாவட்டம் ஆகும். கார்கே 2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந் தார். கார்கேயின் மருமகன் ராதா கிருஷ்ணா டோட்டாமணி கல புரகி (குல்பர்கா) தொகுதியில் போட்டியிடுகிறார்.இந்த மாதம் தொடக்கத்தில் கட்டேதார் சகோ தரர் நிதின் வெங்கையா கட்டே தார் பா.ஜனதா கட்சியில் இணைந் தார். இதனால் மலிகய்யா கட்டே தார் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அஃப்ஜல்புர் தொகுதியில் எம்.ஒய். பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மலிகய்யா கட்டேதார் 3ஆ-வது இடம் பிடித்தார். அவரது சகோ தரர் நிதின் சுயேட்சையாக போட் டியிட்டு 2-ஆவது இடம் பிடித்தார்.
மலிகாய்யா முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பின்னர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது சகோதரர் பா.ஜனதா கட்சியில் இணைந்த விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் எடியூ ரப்பா மற்றும் அவரது மகன் விஜ யேந்திரா ஆகியோரை விமர்சித் திருந்தார்.கார்கேயின் மகனும், கருநாடகா மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, கட்டேதார் காங் கிரஸ் கட்சியில் இணைய முக்கிய காரணமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.சாரதா மோகன் ஷெட்டி உத்தாரா கன்னடா மாவட்டத்தின் கும்தா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 2013 மற்றும் 2018இ-ல் சட்டமன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்.
கருநாடகா மாநில முதல மைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், பிரியங்க் கார்கே ஆகியோர் இரு வரையும் வரவேற்றுள்ளனர்.