புதுடில்லி, ஏப். 20- இந்தியாவில் தொலைதூர பயணங்க ளுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவ ரத்தை அதிகம் பயன்படுத் துகின்றனர். ஆனால் மோடி அரசு இந்த மக் களுக்கு வசதிகள் செய்து தராமல் வந்தேபாரத் போன்று பல புதிய பெயர் களில் அதிக விலை கொண்ட ரயிலை அறி முகப்படுத்தி வெகுமக்கள் பயணிக்கும் ரயில்களை குறைத்துக்கொண்டே வந்தது. இதனால் தொலை தூர ஸ் ரயில்களில் எப் போதும் கூட்டம் நிரம்பி வழிவதை காணமுடியும்.
முன்பதிவு செய்த பெட்டிகளில் கூட சில நேரங்களில் பயணச்சீட்டு எடுக்காத பயணிகள் அதிக அளவில் ஏறிவிடு வதையும், இதனால் அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஏற முடியாமல் தவித்தது தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் காட்சிப் பதிவு வைரலாகி இருந்தது.
டில்லியில் இருந்து கொல்கத்தாவின் அசம் கர் நகருக்குச் செல்லும் கைபியாத் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயிலின் குளிர் வசதிப் பெட்டியில் முன் பதிவு செய்திருந்த ஒரு பயணி ரயில் கதவு கண்ணாடியை உடைப் பது போன்ற ஒரு காட்சிப் பதிவு சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகி றது.
எக்ஸ் தளத்தில் கர் கே காலேஷ் என்ற பயனர் பகிர்ந்த அந்த காட்சிப் பதிவு 32 விநாடிகள் ஓடு கிறது. அதில் குளிர்வசதிப் பெட்டியில் முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர் அந்த பெட்டியில் ஏற செல்கிறார். ஆனால் பயணச்சீட்டு இல்லாத பயணிகள் ஏற்கெனவே அந்த பெட்டிக்குள் அதி கமாக இருந்ததால் அவ ரால் ரயிலுக்குள் ஏற முடியவில்லை. அவர் ரயில் கதவை திறக்கச் சொன்ன போதும் அங் கிருந்த பயணிகள் இட மில்லை என கூறியுள்ள னர்.
இதனால் ஆவேசம டைந்த பயணி ரயில் கத வின் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்த காட்சிப்பதிவு வைரலான நிலையில் ரயில்வே சேவா பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் காசி விரைவு ரயிலில் இதேபோன்று குளிர்வசதிப் பெட்டியில் முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர் தான் பய ணம் செய்த பெட்டியில் பயணச்சீட்டு எடுக்காத பயணிகள் அதிகம் பேர் பயணம் செய்ததால் அவர் தரையில் அமர்ந்தி ருப்பது போன்ற படத்தை வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.