திருச்சி,ஏப்.20- திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985இல் நளினி பிறந்துள்ளார். தற்போது தனது கணவருடன் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார்.
நளினி இந்தியாவில் பிறந்திருந்தாலும், பெற்றோர் இலங்கைத் தமிழர்கள் என்பதால் அவருக்கு கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை வழங்கப் படவில்லை.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி, இந்திய குடியுரிமை சட்டப்படி பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றார்.இதையடுத்து, திருச்சி விமான நிலையம் வயலர்லெஸ் சாலையில் உள்ள எம்.எம் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மய்யத்தில் நளினி நேற்று (19.4.2024) முதன்முறையாக வாக்களித்தார்.
முதல் முறையாக வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்
Leave a Comment