புதுக்கோட்டை, செப். 15- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலு வலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் நடத்துவது குறித்த கலந்து றவாடல் கூட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 17 அன்று சிறப்பாகக் கொண்டா டுவது குறித்து நடந்த இந்தக் கலந் துறவாடல் கூட்டத்திற்கு மாவட் டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழகக் காப் பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக் குழு உறுப்பினர்கள் மு.சேகர், செ.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலா ளர் இரா.செந்தூரபாண்டியன் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஓசூர் மாவட்டத் தலைவருமான வனவேந்தன் அவர்களின் தாயார் சங்கி அம்மாள் இயற்கை எய்திய மைக்கும் பகுத்தறிவு திரைக் கலை ஞரும் இயக்குநருமான மாரிமுத்து அவர்கள் இயற்கை எய்தியமைக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு வீர வணக்கம் செலுத்தப் பட்டது.
எதிர் வரும் செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழாவை அனைத்துக் கிராமங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங் குவது என தீர்மானிக்கப் பட்டது. அதே போல் அன்றைய நாளில் தான் தங்களுக்கும் தங்கள் குடும் பத்தினருக்கும் புத்தாடைகள் எடுத்து அணிந்து கொள்வது, மாவட்டத் திராவிடர் கழக அலு வலத்தில் மட்டுமல்லாது, வாய்ப் புகள் உள்ள இடங்களில் காலை முதல் மாலைவரை இயக்கப் பாடல்களையும் தந்தை பெரியார் பற்றிய பாடல்களையும் ஒலிக்கச் செய்வது, நம்மோடு ஒத்த கருத்து டைய மற்ற இயக்கத் தோழர்க ளையும் இந்நிகழ்வுகளில் பங்கேற் கச் செய்வது, அவர்களை வைத்தும் தந்தை பெரியார் உருவச் சிலை களுக்கும் உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யச் செய்வது, பழைய கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப் பட்டு புதிய கொடியை ஏற்ற வேண்டும், பிளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் தயாரித்து ஒட்ட வேண்டும், விடுதலைச் சந்தாக்கள் புதுப்பிக்கப்பட வேண்டும், என்ற தீர்மானங்களோடு கந்தர்வக் கோட்டையில் தெருமுனைப் பிரச்சாரம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதே போல் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு தமிழர் தகைசால் விருது பெற்றமைக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்ப தோடு அவ்விருதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு நன்றியைத் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட் டன.
மேலும் எதிர்வரும் அக்டோபர் ஆறாம் நாள் தஞ்சாவூரில் நடை பெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு தமிழர் தலைவர் அவர் கள் தலைமையில் நடைபெறும் நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது, எதிர்வரும் 12.9.2023 அன்று காரையூரில் நடைபெறும் கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றும் நூற் றாண்டு வைக்கம் போராட்டம் நூற்றாண்டு கூட்டம் நடைபெறு வதால் அந்தக் கூட்டத்திலும் தோழர்கள் அனைவரும் சென்று கலந்து கொள்வது என்பன உள் ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற் றப்பட்டன.
இந்நிகழ்வில் மேலும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அ.சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு, கந்தர்வக்கோட்டை ஒன்றியத் தலைவர் சு.சித்திரவேல், திருமயம் ஒன்றியத் தலைவர் ஏ.தமிழரசன், மாவட்ட ப.க.தலைவர் அ.தர்ம சேகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.காரல்மார்க்ஸ், புதுக் கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, புதுக்கோட்டை நகர இளைஞரணித் தலைவர் தாமரைச்செல்வன், தா.மரகதம், விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல், இந்திர ஜித், பூ.சி.இளங்கோ, ம.மு.கண் ணன், மாரிமுத்து, ச.மாரியம்மாள், உள்ளிட்ட தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.